இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த விவரத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது ஆசியா பசிபிக் சாலை விபத்தின் கீழ் பசுபிக் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் வழங்கிய தரவுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள காவல்துறையினிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். அதன் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு விட கடந்த 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளதாகவும், காயங்கள் 14.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் விபத்துகள் 1.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.