சைலஜா டீச்சர் இவர் கேரளாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இவர் செய்த பணிகள் அனைத்தும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் கொரோனா பரவலை மிகச்சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். அவ்வளவு சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது.
கொரோனா பரவலின் போது உறுதியான தலைமை மற்றும் சமூக அடிப்படையிலான பொது சுகாதாரத்துறை பணிகளை சிறப்பாக மேற் கொண்டதற்காக 2021 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய பல்கலைக்கழக ஓபன் சொசைட்டி விருதுக்கு கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது கேரளா அமைச்சரவையில் கொறடாவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.