தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது .இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதை வென்றார் .இதையடுத்து முகமது ஷமி 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .அதே சமயம் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளாது.
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றது மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது .ஆனால்5-வது டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அதே சமயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 328 ரன்கள் எடுத்து இந்திய அணி சரித்திரம் படைத்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பாக அமைந்துள்ளது என கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,”இந்திய அணிக்கு இது ஒரு சூப்பர் ஸ்பெஷலான ஆண்டாக அமைந்துள்ளது .இந்த ஆண்டு நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறந்தவை.
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன். சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம் .அதேசமயம் சிறந்த டிரஸ்சிங் அறை ,சிறந்த சூழ்நிலை மற்றும் சிறந்த செயல் திறனுக்கு பங்களிப்பு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது .இந்நேரத்தில் டிரஸ்சிங் அறை சூழல் ஆச்சரியமாக இருக்கின்றது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி போட்டியின் முதல் ஆட்டத்தில் அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வெற்றியை ஒரு நாள் கொண்டாடி விட்டு மீண்டும் பயிற்சிக்கு திரும்புவோம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்துவோம் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார் இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 3-ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறுகின்றது.