2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 இடங்களிலுள்ள பாடல்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
10-வது இடத்தில்:
2021 டாப் 10 பாடல்களில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘டூ டூ டூ ‘பாடல் ரசிகர்கள், குழந்தைகள் என அனைவரையும் கவர்ந்துள்ளது .அதோடு இப்பாடலில் லிரிகல் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் நடனமாடி அசத்தியுள்ளார். இப்பாடல் டாப் 10 வரிசையில் 10-வது இடத்தில் உள்ளது.
9-வது இடத்தில்:
வலிமை படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாங்க வேற மாதிரி பாடல்’ யுவன் சங்கர் ராஜா இசையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது .அதோடு இப்பாடல் யூடியூபில் 39 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.இப்பாடல் டாப் 10 வரிசையில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது .
8-வது இடத்தில்:
8-வது இடத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘ பாரிஸ் ஜெயராஜ் ‘படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘புளிமாங்கா புளிப்’ பாடல்தான் .இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ள இப்பாடல் யூடியூபில் 67 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .
7-வது இடத்தில்:
இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான ‘எனிமி ‘ படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியான ‘ டம் டம் ‘ பாடல் தமிழ் ரசிகர்களை மட்டுமில்லாது மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்பாடல் டாப் 10 வரிசையில் 7-வது இடத்தில் உள்ளது .
6-வது இடத்தில்:
ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வம்புல தும்புல’ பாடல் டாப் 10 வரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.
5-வது இடத்தில் :
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான’ டாக்டர் ‘படத்தில் இடம்பெற்றிருந்த ‘செல்லம்மா செல்லம்மா ‘ பாடல் டாப் 10 வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது .இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான இப்பாடலுக்கு சிவக்கார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
4-வது இடத்தில் :
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘ஒண்டி வீரன்நானடி’ பாடல் யூடியூபில் 186 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது .இந்த பாடலை பாடலை சிம்பு பாடியுள்ளார் . இப்பாடல் டாப் 10 வரிசையில் 4வது இடத்தில் உள்ளது.
3-வது இடத்தில் :
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ‘ரகிட ரகிட’ பாடல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ‘புஜ்ஜி ‘ பாடலும் குழந்தைகளை அதிக அளவில் கவர்ந்துள்ளது .
2-வது இடத்தில் :
அடுத்ததாக 2-வது இடத்தில் 90களில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்றிருந்த ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் ‘பாடல் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இப்பாடலை ரீமேக் செய்துள்ளார் . ரீமேக்கிலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் இடத்தில் :
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர் ‘படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த ‘வாத்தி கம்பிங்’ பாடல் சிறியவர்கள் ,பெரியவர்கள் ,ரசிகர்கள் என அனைவரையும் பெரிதளவில் கவர்ந்துள்ளது . இப்பாடல் டாப் 10 வரிசையில் முதலிடத்தில் உள்ளது 300 மில்லியன் பார்வையாளர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.