ஆடி நிறுவனம் விரைவில் 2020 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் கொண்டு வர இருக்கின்றது. மிக விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் . இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பே ஸ்லிப் மாடல் டீசரை ஆடி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய 2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ் கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார் போன்ற மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
ஆடி நிறுவனமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்த மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. நிறங்களை பொருத்தவரை 2022 ஆடி A8 மாடல் மெட்டாலிக் டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் ஃபிர்மனெண்ட் புளூ, மேன்ஹேட்டன் கிரே மற்றும் அல்ட்ரா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் டேடோனா கிரே, ஃபுளோரெட் சில்வர், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் கிளேசியர் வைட் போன்ற நிறங்கள் மேட் ஃபினிஷிங்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.