Categories
மாநில செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிப்பு..!!

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார்.

தொல்காப்பியர் தமிழ் சங்க விருது புதுவை தமிழ்ச் சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து

பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – கவிதை மரபும் தொல்காப்பியமும் – பேராசிரியர் ராம குருநாதன்.

சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மணல் வீடு – மு.அரிகிருஷ்ணன்.

புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – வட சென்னை நிவேதிதா லூயிஸ்.

பாரதியார் கவிதை விருது – மவுனன் யாத்திரிகா.

பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது – தமிழரின் சுற்றுவட்டார பாதையில் தந்தை பெரியார் – கருவூர் கண்ணன்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது – உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் – குடந்தை பாலு

ஜி யு போப் மொழிபெயர்ப்பு விருது – சித்தார்த்தன்

அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – ஏ.ஆர் முருகேசன், விழியன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Categories

Tech |