இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2009-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு குரானா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே நடப்பு 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த பிபிசி திட்டமிட்டுள்ளது.
தற்போது வைரஸ் தொற்று குறைந்து தான் வருகிறது என்றாலும் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில்தான் நடைபெறுமாவே என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. அதோடு பிபிசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஆலோசனை செய்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கங்குலி கூறுகையில், “இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தான் நடைபெறும் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா, மும்பை, புனே போன்ற இடங்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு நாகவுட் போட்டிக்கான இடங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.” என கூறினார்.