நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து நாட்டு மக்களைத் திறந்த வெளி கைதிகளாக மாற்ற இயலும் “குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு 2022 யை” மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இதையடுத்து குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாக்கப்படுவதன் வாயிலாக மீண்டும் நவீன குற்றப் பரம்பரையினரை உருவாக்க முயலும் என்பது பா.ஜ.க அரசின் செயல் எதேச்சதிகாரப் போக்கின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் முற்றாகப் பறிக்கும் அடிப்படையில் அடிப்படை அரசியலமைப்பிற்கே எதிராகவுள்ள குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022 யை ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கப் போராடும் அனைத்து அரசியல் கட்சியினரும், மனித உரிமை அமைப்புகளும், சமூகச்செயற்பாட்டாளர்களும் எதிர்த்துப் போராடி, அதனைத் திரும்பப்பெற செய்ய களத்துக்கு வரவேண்டும் என்று அழைத்து அறைகூவல் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.