Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துறைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான எழுத்து தேர்வானது 01/02/2022 முதல் 09/02/2022 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்விற்கான நுழைவு சீட்டானது டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. ஆகவே தேர்வர்கள் https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Deparetmental Test ஹால் டிக்கெட் 2022-ஐ எப்படி பதிவிறக்குவது

டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

இதையடுத்து முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.

அதன்பின் உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.

அதனை தொடர்ந்து தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்

இப்போது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.

பின் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Categories

Tech |