தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பணியின் பெயர்
# உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (கூட்டுறவு தணிக்கையின் உதவி இயக்குனர்)
காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை
# 8 பணியிடங்கள்
விண்ணப்பதாரரின் வயது வரம்பு
# 01.07.2022 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM ஆகிய பிரிவுகளுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி
# அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MA(Co-operation) அல்லது M.Com., உடன் (Co-operation) அல்லது M.Com., (Cooperation இல்லாமல்) மற்றும் Higher Diploma in Co-operation (or) ICAI படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்
# ரூ 56,100 முதல் 1,77,500 வரை.
தேர்வு முறை
# எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்
# 30.04.2022
.
பணியின் பெயர்
# செயல் அலுவலர் நிலை- I இந்து சமய அறநிலையத்துறை (செயல் அலுவலர் தரம் – I)
காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை
# 4 பணியிடங்கள்
விண்ணப்பதாரரின் வயது வரம்பு
# 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM ஆகிய பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி
# அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல், சட்டப் படிப்பு ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்
# ரூ 37,700 முதல் ரூ1,19,500 வரை.
தேர்வு முறை
# எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்
# 23.04.2022, 24.04.2022
விண்ணப்பக் கட்டணம்
# ரூ 150, எனினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்
# ரூ 150, எனினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை
# விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in (அ) http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முன்பே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
# 21.02.2022