தற்போது 2022 ஆம் வருடம் நடந்து கொண்டுள்ளது. இந்த 2020 முதல் 2022க்குள் மனிதர்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இயற்கை சார்ந்த பேரிடர்கள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பல பிரச்சினைகளை மனிதர்கள் தாண்டி வந்துள்ளனர். தானாக நடக்க கூடிய இயற்கை பேரிடர்களை தாண்டி மனிதன் செய்யக்கூடிய தவறுகள் காரணமாக திரும்ப இயற்கையால் தண்டிக்கப் படுவதற்கான வரலாற்றுச் சான்றுகளை நாம் தொடர்ந்து கண்டு கொண்டே வருகிறோம். அந்த வகையில் 2050ஆம் ஆண்டு இந்த உலகம் எப்படி எல்லாம் மாறி இருக்கும் என்பதை பலரும் பலவிதமான கருத்துக்களாக தெரிவித்து வருகின்றன அதைப்பற்றி இந்த தொகுப்பில் ஒரு பார்வையாக பார்க்கலாம்.
முதல் விஷயம் 2050ல் உலகின் மக்கள் தொகை அதிகமாவதற்கு வாய்ப்புள்ளதால் 50% மக்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இருக்காது. பெரும்பாலான மக்கள் ஏதாவது அழுக்கு கலந்த தண்ணீரை குடித்து வருவார்களாம். அதுமட்டுமில்லாமல் நாம் உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடுகளில் 50 சதவீதத்தை அழித்து வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் பல விலங்குகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அரிய விலங்குகள் எல்லாம் காணாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
2025 ஆம் வருடம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தங்களுடைய ஃபர்ஸ்ட் ராக்கெட்டை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறார்கள். இப்படி இந்த நிறுவனத்தின் அனைத்து ராக்கெட்டுகளும் வெற்றியுடன் அமைந்தால் 2050ஆம் ஆண்டு மக்கள் செவ்வாய்க்கிரகத்தில் குடியேறி வாழ்வதற்கு ஆரம்பித்துவிடுவார்கள். 2050 வருடத்திற்குள் விலங்குகள் உடைய பரிணாம வளர்ச்சியில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மனிதர்கள் கண்டுபிடித்த ரோபோக்கள் மனிதர்களை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.
இதனால் பல துறைகளில் மனிதர்களை விட மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோட்டுகள் வேலை பார்க்க ஆரம்பிக்கும். 2050 வருடத்தில் மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கும். இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும். 2050 வருடத்தில் கொரோனா வைரஸை காட்டிலும் மிகப்பெரிய வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குளோபல் வார்மிங் காரணமாக பனிக்கட்டிகள் அனைத்தும் உருகி கடற்கரை நகரங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விடும் அபாயம் ஏற்படும்.