2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வு, மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2022 ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும், அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு நடக்கும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு நடக்கும்.. குரூப் 2 & 2ஏ பணிகளில் 5,831 பணியிடங்களும், குரூப் 4 பணிகளில் 5,255 பணியிடங்களும் காலியாக உள்ளன..
தேர்வு அறிவிப்புக்கு முன், தமிழ் தாளுக்கான பாடத்திட்டம் வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படும்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்தாளில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்.. கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும்.. தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
மேலும் ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேரவரின் தனிப்பட்ட விவரத்தை பார்த்தே பாதி வழியில் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளது. தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. முறைகேடுகளை தடுக்க ஓஎம்ஆர் விடைத் தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விபரம் இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.