உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டேஸ்ட் அட்லஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி உணவுகள் மற்றும் பானங்களுக்கான வாக்குகள் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 95 நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், இத்தாலியன் உணவுகள் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் கிரீஸ் மற்றும் ஸ்பெயின் இருக்கிறது. அதன்பிறகு இந்தியா 4.54 மதிப்பெண்களைப் பெற்று 5-ம் இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவு வகைகளைச் சேர்ந்த நாண், தால், சட்னி, பிரியாணி மற்றும் தந்தூரி உட்பட 400 இந்திய உணவு வகைகள் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழு பட்டியலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Which one is your favorite?
Full top 95 list: https://t.co/194Xj0ZMZ4 pic.twitter.com/v4uYHnGzGD— TasteAtlas (@TasteAtlas) December 22, 2022