Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 5 லிஸ்ட் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை கவர்கிறது. இதேபோன்று ஒரு சில பாடல்களை ரசிகர்களால் மறக்க கூட முடியாது. அந்த வகையில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த டாப் 5 பாடல்களின் லிஸ்ட்டை யூட்யூப் வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் தமிழ் பாடல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து 2-ம் இடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லி பூ பாடல் இருக்கிறது. இதைத்தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காத பாடல் 3-ம் இடத்திலும், தாய் கிழவி பாடல் 4-ம் இடத்திலும், தேன்மொழி பாடல் 5-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து 3 பாடல்கள் டாப் 5 லிஸ்டில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |