Categories
இந்திய சினிமா சினிமா

2022-ல் உலகின் சிறந்த டாப் 50 நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர்…. சாதித்து காட்டிய ஷாருக்…!!!!

உலக அளவில் சிறந்த நடிகர்கள் 50 பேரின் பட்டியலை வருடம் தோறும் இங்கிலாந்தில் உள்ள எம்பியர் என்ற பத்திரிகை வெளியிடும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு முடிவடையப் போவதால் உலகில் உள்ள 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை‌ எம்பியர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்ஷன் போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதன்பிறகு உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகரின் பெயர் மட்டும்தான் வந்துள்ளது. அதன்படி நடிகர் ஷாருக்கான் மட்டும் தான் உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். உடைக்க முடியாத பல வெற்றிகள், பில்லியன் கணக்கில் ரசிகர்கள், நான்கு தலைமுறைகளாக நீடித்திருக்கும் கரிஷ்மா போன்றவைகள் தான் ஷாருக்கானின் பெயர் உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் வருவதற்கு காரணம் என்று பிரிட்டிஷ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பதான் திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் இடம் பெற்றிருப்பது சோதனையிலும் ஒரு சிறிய ஆறுதல் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Categories

Tech |