மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் வருடம் தோறும் தேசிய நல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. அதில் புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள அர்ச்சன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவிற்கு சிறந்த நல்ல ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கற்றல் கற்பித்தல் புதிய கையாண்டு வருவதற்கான இந்த விருது இவருக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது. விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்த் ராஜாவிற்கு துணைநிலை ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த 20 வருடங்களாக தனது பணியை சிறப்பான முறையில் செய்ததற்கான ஒரு பாராட்டாக கிடைத்திருக்க கூடிய இந்த விருது மிகவும் மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் தருவதாக கூறிய அவர் மாணவர்கள் பள்ளியில் நடக்கக்கூடிய பாடங்களை மட்டும் படிக்காமல் மற்ற புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் பெற்றோர்கள் அரசு பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விருது பெற்ற ஆசிரியர் அரவிந்த் ராஜா கூறியுள்ளார். இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் கிடைத்திருப்பது அந்த பள்ளிக்கும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான தருணமாக இருப்பதாக பெருமிதம் தெரிவிக்கின்றார்கள் மேலும் இது போன்ற விருதுகள் மற்ற ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருந்து வருகின்றது.