2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு முக்கிய அம்சங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி,
# மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலமாக ஆலோசனை.
# மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை.
# குடைக்கான இறக்குமதி வரியானது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
# வருமான வரி விகித மாற்றம் தொடர்பாக எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
# வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரியானது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
# மாநிலங்களுக்கு உதவுவதற்கு ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
# மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு வருமான வரியில் புதிய சலுகையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.
# ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் TDS சலுகை.
# ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான TDS 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்.
# மாநிலங்களுக்கு உதவ 3 வருடங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
# கூட்டுறவு நிறுவனங்கள் செலுத்தக்கூடிய குறைந்தபட்சம் மாற்று வரி விகிதம் 15 சதவீதமாக குறைக்கப்படும்.
# அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூபாய் 7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 35.4% அதிகம்.
# ஆன்லைனில் இணையும் தபால் மற்றும் வங்கித்துறைகள், தபால் அலுவலக கணக்கில் இருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி.
# 1.5 லட்சம் அஞ்சலகங்கள், பொதுத்துறை வங்கிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
# தபால் துறையை, வங்கிகள் துறையோடு இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
# மணிப்பூர், திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
# நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
# ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளன.
# சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டமானது வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.
# பிட்காயின் ஆகிய கிரிப்டோ கரன்சி வாயிலாக பெறப்படும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
# விர்ச்சுவல் மூலதனம் சொத்துக்களின் மீதுள்ள வரியில் 1 சதவீதம் TDS வழங்கப்படும்
# உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அடிப்படையில் 68 சதவீதம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை
#இ பாஸ்போர்ட் திட்டமானது விரைவில் அறிமுகம்.
# 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
# வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூபாய் .2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு .
# மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்வது குறித்து திட்டம் கொண்டு வரப்படும்.
# ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையானது அறிமுகப்படுத்தப்படும்.
# நடப்பு ஆண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்.
# பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை.
# வங்கிகளுடன் ஒன்றிணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை.
# ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டி.வி சேனல்கள்.
# சிறு குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
# அதன்பின் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
# 18 லட்சம் வீடுகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் கோடியில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
# பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
# கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள் உருவாக்கப்படும்.
# ரூபாய் 44 ஆயிரம் கோடி செலவில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
# நாடு முழுவதும் அடுத்த மூன்று வருடங்களில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்
# 25 வருடங்களை இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை வரும்.
# வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ் அடுத்த நிதி ஆண்டில் 22,000 கி.மீ. தொலைவிற்கு சாலை கட்டமைப்பு வசதிகளானது மேற்கொள்ளப்படும்.
# போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
# வரும் 2023க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்