இந்த 2022 ஆம் ஆண்டு 8 திரைப்படங்கள் அடுத்தத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021- ஆம் ஆண்டை தொடர்ந்து புத்தாண்டான 2022- ஆம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது .இந்த நிலையில் இந்த 2022-ஆம் ஆண்டில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘வலிமை’ படத்துக்காக 3 வருடங்கள் ரசிகள் காத்துள்ளனர். இதில் எச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் உருவாக்கியுள்ள வலிமை படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன் ‘ படம் வருகிற பிப்ரவரி மாதம் 4-ம் தேதி ரிலீசாக உள்ளது .அதோடு தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் இந்த வருடம் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளது .
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’படம் விஜய்க்கு 65-வது படமாகும்.இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்தது .இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ திரைப்படம் வெளியாக உள்ளது .இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் வில்லனாக இம்ரான் பதன் நடித்துள்ளார். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள ‘விக்ரம் ‘திரைப்படம் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலஹாசனுடன் விஜய்சேதுபதி , பகத் பாசில் உட்பட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்த காடு ‘ திரைப்படம் இந்த ஆண்டு திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் சிம்பு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .அதேசமயம் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறன்’ திரைப்படமும் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது . அதோடு இப்படத்தின் ஒரு சில போஸ்டர்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது .இதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள ‘டான்’ திரைப்படம் முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .அதோடு லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனால் இன்று 2022ஆம் ஆண்டு இந்த 8 திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.