2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது:
கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல், இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள்.
இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். மேலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்தது:
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போரை தொடங்கியது. அந்நாட்டின் தலைநகர் உட்பட பல நகர்கள் மீது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டது. மேலும், அந்நாட்டின் மீது வான்வழி தாக்குதல்களையும் ரஷ்யா மேற்கொண்டது. அதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைனும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரிலிருந்து ரஷ்யா தங்கள் படைகளை முழுமையாக விலக்கிக் கொண்டது. இது ரஷ்ய நாட்டிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கனடா நாட்டில் புதிதாக குடியேற்ற கொள்கை:
வரும் 2024 ஆம் வருடத்தில் கனடா, 4,75,000 குடியேற்றங்களை அனுமதிப்பதற்கு இலக்கு வைத்தது. அதற்கான அறிவிப்பை இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது. கனடா நாட்டில் இந்திய மக்கள் தான் அதிகமானோர் குடியேறுகிறார்கள். எனவே இந்த அறிவிப்பு இந்திய மக்களுக்கு அதிக பலன் தருவதாக அமைந்துவிட்டது.
கடும் நிதி நெருக்கடியில் இலங்கை:
இலங்கை இந்த வருடம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் கடும் சிக்கலான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, மக்களின் போராட்டம் தீவிரமடைந்து பெரும் கலவரங்களும் வெடித்தது.
கருக்கலைப்பு உரிமைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது:
அமெரிக்க அரசு கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது. அதன்படி, 1973 ஆம் வருடம் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம். அது அவர்களின் உரிமை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் தற்போது தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கருக்கலைப்பை தடை செய்யும் நடவடிக்கையை ஒவ்வொரு மாகாணங்களாக நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஈரானில் நடக்கும் போராட்டம்:
ஈரான் நாட்டில் மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் சரியாக ஹிஜாப் அணியாமல் பொது வெளியில் வந்த காரணத்தால் காவல்துறையினரால் பலமாக தாக்கப்பட்டார். அதன் பிறகு, அந்த பெண் உயிரிழந்ததால் அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்தது. பெண்கள், ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டு தங்கள் தலை முடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் போராட்டங்களை தொடங்கினர். இதில் போராட்டம் மேற்கொண்ட குழந்தைகள் 43 பேர், பெண்கள் 25 பேர் உட்பட 326 நபர்கள் இறந்ததாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.