தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்துக்கு நாயகியாக பூஜா ஹெக்டே இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்நிலையில் விஜய்யும் பீஸ்ட் படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார். எனினும் இன்னும் படப்பிடிப்பு முழுமை அடையவில்லை. சில தினங்களுக்கு மற்றவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
அதன்பின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இதனைதொடர்ந்து உடனடியாக டப்பிங்கை தொடங்கி கிறித்துமஸ் நாளுக்குள் விஜய் தனது டப்பிங் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளார். இதனைதொடர்த்து ஜனவரி முதல் வாரத்தில் அடுத்து நடிக்க இருக்கும் வம்சி படத்துக்கான லுக் டெஸ்ட் செய்ய திட்டமிட்டு உள்ளார். மேலும் வம்சி படம் பிப்ரவரி மாதம் துவங்கி ஜூன் மாதத்திற்குள்முடிவடைந்து, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விரும்புகிறார். அதன் அடிப்படையில் அடுத்த வருடம் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸாக திட்டமிட்டுள்ளார்.