Categories
வேலைவாய்ப்பு

(2022) SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு: 24,369 காலிப் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் சுமார் 24,369 இடங்கள் காலியாக இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப்படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ்படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (CRPF), ITBP, Sashastra Seema Bal (SSB), செயலகப் பாதுகாப்புப் படை (SSF), ரைபிள்மேன் (பொதுப்பணி) அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் சிப்பாய் NCB (நர்கோடிக்ஸ் கட்டுப்பாட்டுப் பணியகம்) ஆகிய பல படைகளில் வருடந்தோறும் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய இந்த ஆள்சேர்ப்பு இயக்கத்தை தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது. ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் SSC GD கான்ஸ்டபிள் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். கான்ஸ்டபிள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பகட்டணம் மற்றும் SSC GD கான்ஸ்டபிள் தேர்வு தேதிகள் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.

பதவியின் பெயர்- கான்ஸ்டபிள் (பொதுப்பணி)

அறிவிப்பு வெளியான நாள்- 27/10/2022

காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை- 24369

பணி இடம்- இந்தியா முழுவதும்

விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யவும்.

SSC GD கான்ஸ்டபிள் சம்பளம்

SSC GD கான்ஸ்டபிள் வயது வரம்பு 2022(01.01.2023)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயதுவரம்புக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.01.2000க்கு முன்னதாகவும் 01.01.2005க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது.

வயதுதளர்வு

SSC GD கான்ஸ்டபிள் 2022-க்கான அதிகபட்சம் வயது வரம்பில் தளர்வு பின்வருமாறு

விண்ணப்ப கட்டணம்

 

கல்விதகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம், பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (அ) 10-வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

இந்த ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் குடியுரிமை தகுதி 

இந்திய குடிமகன், நேபாளம், பூட்டானை சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் 1962ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த ஒரு திபெத்திய அகதி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாகிஸ்தான், பர்மா, ஆப்கானிஸ்தான், கென்யா, தான்சானியா, இலங்கை, உகாண்டா, ஜாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

 

Categories

Tech |