Categories
மாநில செய்திகள்

2022 TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு?…. ‘உடனே விண்ணப்பிங்க!’…. முழு விவரம் இதோ….!!!!

டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறைகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) வேலைவாய்ப்பு அறிவிப்பு :-

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டிருந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பில் கிட்டத்தட்ட 22 வகையான போட்டி தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் புதிய மாற்றங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் 100% தமிழக இளைஞர்களை அரசு பணிகளில் நியமிக்கும் பொருட்டு ‘தமிழ் மொழி தேர்வு’ போட்டித் தேர்வுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூட்டுறவு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை :-

* காலி பணியிடங்கள் – செயல் அலுவலர் நிலை உள்ளிட்ட 4 காலி பணியிடங்கள் உள்ளது.

* தேர்வு முறை – நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

* தேர்வு தேதி – எழுத்து தேர்வுகள் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

* கல்வி தகுதி – வணிகவியல், சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

* வயது வரம்பு – 35. ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

* தேர்வுக்கான வினாக்கள் – பொதுவான சட்டங்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை சட்டங்கள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

கூட்டுறவுத்துறை :-

* காலிப்பணியிடங்கள் – கூட்டுறவு தணிக்கை, உதவி இயக்குனர் உள்ளிட்ட பணிகளில் சுமார் 8 காலிப்பணியிடங்கள் உள்ளது.

* கல்வி தகுதி – M.A ( co-operation ) (or) M.com, With ( Co-operation ) (or) ICAI (or) M.com., ( without co-operation ) plus Higher Diploma in Co-operation உள்ளிட்ட கல்வித்தகுதி முடித்தவர்கள் இந்த பதவிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்

* ஊதியம் – மாதம் ரூ.56,100 – 1,77,500 வரை வழங்கப்படும்.

* தேர்வு முறை – 2 கட்டமாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

* தேர்வு தேதி – இந்த பணிக்கான தேர்வு ஜனவரி 30 அன்று நடைபெற உள்ளது.

* தேர்வுக்கான வினாக்கள் – கணக்கியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.

Categories

Tech |