சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் 2023 ஆம் வருடத்திற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி பட்டியலை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்டம்பர் 18-ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்.,17 என மாற்றி அறிவித்தது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதனால் விடுமுறையை செப்.,18-க்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.