Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்குள் 50% மின்சார வாகனங்கள்…. அதிரடி காட்டும் டெல்லி அரசு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொது மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதனால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்த முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

இது குறித்து பேசிய டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வாடகை கார் மற்றும் டெலிவரி நிறுவனங்கள், மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் இருசக்கர வாகனங்களில் 50%, நான்கு சக்கர வாகனங்களில்  25% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும். இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து பயணிக்கும் வாடகை வாகனங்கள், டெலிவரி வாகனங்களுக்கான புதிய வரைவு கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |