Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்…. வங்கி லாக்கர் விதிகள் மாற்றம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது லாக்கர் தொடர்பான புதிய விதிகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

மேலும் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முதலில் புதிய லாக்கர் விதிகளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.இந்த புதிய விதிகளின்படி விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டால் அல்லது ஏதேனும் விபத்தால் அதனை இழக்க நேரிட்டால் வங்கியில் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு பொருள்களுக்கு இணையாக இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் லாக்கரில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் லாக்கரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு எஸ் எம் எஸ் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும். லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போது மூன்று ஆண்டுகளுக்கான வாடகையை செலுத்த வேண்டும்.

Categories

Tech |