மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி இனி அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகையை பெற விரும்பினால் நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் அளிக்கப்பட்டிருந்த தொடர்புகள் தற்போது வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் வரி செலுத்தும் நபர்கள் இனி சிகிச்சைக்காக பெரும் தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வழங்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.