உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் தனது பயனர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வருகிறது. இது வந்த பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது குறைந்து விட்டது. புது படம் ஏதாவது வெளியானால் மக்கள் அதனை வீட்டிலிருந்தே netflix மூலம் சந்தா செலுத்தி பார்த்து விடுகின்றனர். இந்த netflix கணக்கு பயன்படுத்துபவர்கள் அதன் பாஸ்வேர்டை தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் ஏராளமானோ சந்தா செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சந்தாதாரர்கள் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம் என்று நெட் பிலிக்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் Netflix பாஸ்வோர்ட் தொடர்பான விதிமுறைகளை மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஸ்வேர்டை பகிரும் நபர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.