Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் சிறப்பு பரிசு குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் தொகுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனவும் கடந்த ஆண்டு நடந்த குளறுபடி இந்த ஆண்டு நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |