Categories
சினிமா தமிழ் சினிமா

2023 ஆம் வருடம் முதல் தொடங்கும் சுற்றுப்பயணம்… வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்…!!!!!

நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பா நாடுகளில் அதிலும் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்திற்கு பின் நடிகர் அஜித் ஏகே 61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் அஜித் விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து தனது நண்பர்களுடன் இமயமலை இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி ரோதாம் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சூழலில் அஜித் குமாரின் பைக் ரைடிங் சுற்றுப்பயணத்திட்டம் பற்றி விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக கடந்த 2021 ஆம் வருடம் பைக் ரைடிங் உலகம் சுற்றுப்பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் வருடம் முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க இருக்கிறாராம். இந்தியாவில் அவர் மேற்கொள்ளும்  சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விபரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |