Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2023 ஆம் வருட காலண்டரில் QR ஸ்கேன்…. ஈஸியா எல்லாமே தெரிஞ்சிக்கலாம்…. அசத்தும் தயாரிப்பாளர்கள்…!!!

நாம் அனைவரும்  டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகிறார்கள் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள்.

2023ஆம் ஆண்டு வருவதையொட்டி புதிய காலண்டர்களை தயாரிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனம் தங்களின் தினசரி காலண்டரின் ஒவ்வொரு நாட்களிலும், QR ஸ்கேன் கோட்டை வைத்துள்ளது. அதை ஸ்கேன் செய்வதுமூலம் அன்றைய நாள் பற்றிய அனைத்து தகவல்களும் வீடியோவாக வந்துவிடும். இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |