பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் விஷயங்களை முன்னரே அறிந்து சொன்ன பாபா வாங்கா, 2023ஆம் ஆண்டு குறித்து பயமுறுத்தும் செய்திகளை தெரிவித்திருக்கிறார். வரப் போகும் ஆண்டில் பயோ ஆயுதங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும், சூரியப் புயல் ஒன்று பூமியை கடுமையாக தாக்கும், பூமியின் சூரிய வட்டப் பாதையில் மாற்றம் ஏற்படும் ஆகிய ஆபத்துகளை வாங்கா கணித்துள்ளார். இவர் இதுவரை சொன்னதில் 85% சரியாக நடந்திருக்கிறது.