உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கிய தாக்குதல், தற்போதுவரை நீடித்து வருகிறது. இப்போரில் இருநாடுகளின் தரப்பிலும் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டைநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே போரில் உருக்குலைந்து உக்ரைன் நாட்டுக்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து சார்பாக 1.5 பில்லியன் டாலர் அளவிலான கடன்உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடத்திற்கான உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் உக்ரைன் மீட்புமாநாடு 2023 இங்கிலாந்து நாட்டில் நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்மாநாட்டில், போரால் உருக்குலைந்த உக்ரைனை எவ்வாறு மீண்டும் கட்டி எழுப்புவது என்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.