அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.