பாரிஸ் நகரில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வருகிற 2023-ம் ஆண்டு பெரும் அளவில் சரியும் என்று கூறியுள்ளது. அதோடு 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.3% மட்டும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான்.
ஏனெனில் போரின் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது.
இதனையடுத்து வருகிற 2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் உற்பத்தியானது 0.5% ஆகவும், ஐரோப்பிய நாடுகளில் 0.25% ஆகவும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார சரிவு காரணமாக உலக அளவில் மோசமான எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனவும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.