Categories
அரசியல் தேசிய செய்திகள்

2023-வரை மொட்டை தலையுடன் இருப்பாராம்…. எம்எல்ஏ பாஜகவில் இருந்து…. விலகிய காரணம் என்ன..?

பாஜகவைச் சேர்ந்த ஆஷிஸ் தாஸ் திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தொடர்ந்து முதலமைச்சர் பிப்ளாப்தேப்  குறித்த விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்று தனக்கு மொட்டை அடித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆசிஷ் தாஸ், தான் பாஜகவில் இருந்து தான் விலகுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் கூறினார் .

மேலும் பல எம்எல்ஏக்களும் இனிவரும் காலங்களில் பாஜகவில் இருந்து விலகுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2023 ஆம் வருடம் பாஜக அரசு அகற்றப்படும் வரை மொட்டைத்தலையுடனேயே தான் இருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |