மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. புது ஆண்டு இவர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புடன் தொடங்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2023ல் அதிகரிக்கப்படவுள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். இந்த முறை ஊழியர்களின் அகவிலைப்படி(DA) 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புது உயர்வுக்கு பின், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 2023ம் வருடத்தின் முதல் DA அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்பாக ஊழியர்கள் இப்பரிசை பெறுவர். மார்ச் 1, 2023 அன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தற்போது வரை ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.