Categories
மாநில செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான அரசு வேலை தேர்வு பட்டியல் வெளியீடு…. தமிழக அரசின் அறிவிப்பால் அதிருப்தியில் இளைஞர்கள்…..!!!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் கடந்த வருடம் இடம்பெற்ற பெரும்பாலான தேர்வுகள் இடம்பெறாததோடு முக்கிய தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4, 5ஏ போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அட்டவணை 11 பிரிவுகளின் படி 1757 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதன்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாலை ஆய்வாளர் பணிக்கு 762 பணியிடங்கள், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு 101 பணியிடங்கள் போன்றவைகளுக்கு மட்டும் தான் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் 11,982 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது‌ 1754 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியானது அரசு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிக்கைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்ததோடு அரசு பணிகளில் இருக்கும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |