Categories
மாநில செய்திகள்

2023 JEE நுழைவுத் தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல்…. 10 லட்சம் பேரின் நிலை என்ன….???

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் கிரேடு குறித்த விவரங்கள் அனைத்தும் கேட்கப்படுகிறது.

அந்த விவரங்களை பூர்த்தி செய்த பிறகே அடுத்த கட்ட விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இயலும். இந்நிலையில் கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களால் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. ஏனென்றால் அந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக தமிழகத்தில் பொது தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழில் ஆல் பாஸ் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. மதிப்பெண் விவரங்கள் எதுவும் இடம்பெறாததால் அந்த மதிப்பெண் விவரத்தை நிரப்ப முடியாமல் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றன.

Categories

Tech |