இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இரண்டாம் கட்ட ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6,8,10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதில் ஏப்ரல் 13 மற்றும் 15 ஆகிய தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு 2023-ம் ஆண்டில் ஏப்ரல் 26, 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதேபோன்று 2023-ம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் நுழைவு தேர்வு மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 1 முதல் 7-ம் தேதி வரை ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விவசாய ஆராய்ச்சி படிப்புக்கான ICAR AIEEA தேர்வுகள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nta.ac.in என்ற முகவரியை அணுகலாம்.