Categories
உலக செய்திகள்

“2023-ல் இருளில் மூழ்கும் உலகம்”….. கொடிய நோயால் மரணம்…. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு….!!!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கூறும் கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இவர் 5078-ம் ஆண்டு வரை நடக்கும் நிகழ்வுகளை கணித்து கூறியுள்ளார். இவர் சைபீரியாவில் 2022-ம் ஆண்டு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்படும் என்ற தன்னுடைய கணிப்பில் கூறியிருந்தார். இவர் கூறியது போன்று 48 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனியில் சிக்கிய வைரஸ்கள் பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு வெப்பநிலை அதிகரிப்பினால் பணியானது உருகி வருவதால் பணியில் உறைந்துள்ள பல வைரஸ்கள் மீண்டும் பரவும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. இதேபோன்று நடப்பாண்டில் ஆஸ்திரேலியா நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும் என்றும், பல நாடுகள் குடிநீர் இல்லாமல் குதவிக்கும் என்று கணித்துக் கூறியிருந்தார். இந்த கணிப்பும் பலித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பை கூறியுள்ளார். அதாவது 2023-ம் ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படுவதுடன், பெரிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை தாக்கும் என்று கணித்துள்ளார்.

அதோடு உலகம் முழுவதும் இருளில்மூழ்குவதோடு, வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து மக்களை தாக்குவார்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு 2023-ம் ஆண்டில் ஆய்வகத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி குழந்தைகளை உருவாக்கிக் கொள்வதோடு, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அதன் நச்சு ஆசிய கண்டத்தை மூடும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் கொடிய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏராளனமான மக்கள் இறப்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

Categories

Tech |