Categories
அரசியல் மாநில செய்திகள்

 2024ல் சட்டமன்றத்திற்கு தேர்தல்?.. ஈபிஎஸ் பேட்டி!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று கூறினார்..

மேலும் அவர், நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர்.. நகைக்கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவாக இல்லை.. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்றார்..

Categories

Tech |