Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடம் முடிவதற்குள்… அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பு…? மத்திய மந்திரி பேச்சு…!!!!

உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம்.

இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு எட்டாயிரம் கோடி மதிப்புள்ளான திட்ட பணிகளுக்கான அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பணப்பற்றாக்குறை இல்லை எனவும் அவர் பேசியுள்ளார். இதன்பின் லக்னோ நகரில் முதல் மந்திரி இல்லத்தில் நடைபெற்ற மறுசீராய்வு கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். அந்த கூட்டத்தில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டுள்ளார்.

Categories

Tech |