பாஜகவால், தான் கொல்லப்படலாம் என திருமாவளவன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல கூட்டணி அமைக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். மேலும் பாஜகவை எதிர்த்து வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் பாஜக அடுத்த பக்கம் இருக்க வேண்டும் என்றும் வியூகங்கள் எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றன. இந்த நிலையில் 2024 ஆம் தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்து விட்டால் என்னை சுட்டுக் கொல்லவும் வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தொண்டர்கள் மத்தியில் பேசி உள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
RSS இயக்கத்திற்கு முழு எதிரியாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். எனவே, 2024 லோக்சபா தேர்தலில் BJP ஆட்சிக்கு வந்தால், ஒரே இரவில் இந்திய அரசியல் சாசனம் செல்லாது என்ற அறிவிப்பு வரும். மனுஸ்மிருதிதான் நாட்டின் சட்டம் என்பார்கள், அதன்பின், பலர் கைது செய்யப்படலாம். அதில், திருமாவளவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.