Categories
தேசிய செய்திகள்

“2024 பொது தேர்தல்”…. பாஜகவை வீழ்த்த நாம் ஒன்றுகூட வேண்டும்… தெறிக்கவிட்ட மம்தா பானர்ஜி….!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று (மார்ச்.8) நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரசின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பாஜக-வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார். இதையடுத்து மம்தா பேசியபோது, நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதில் பா.ஜ.க.வினர் கலகக்காரர்கள் மற்றும் அது ஓர் ஊழல் கட்சி ஆகும். ஜனநாயகத்தினை அழிக்கவேண்டும் என்று அவர்கள் விருப்பபடுகிறார்கள். அதன்பின் சபையில் நேற்று ஜனநாயகம் காத்ததற்காக திரிணாமுல் காங்கிரசின் மகளிர் எம்எல்ஏ-க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார்.

Categories

Tech |