ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 2024 ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இழக்கு நிர்ணயித்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதனால் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இத்திட்ட பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதில் கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு நிலவரம் குறித்தும் இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் மாநிலங்கள் விளக்கி வருகின்றனர்.