தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்று வழித்தடங்களுக்கான பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது.
இருந்தாலும் விமான நிலையம் மற்றும் கீழம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் 11 ரயில் நிலையங்கள் அமைய உள்ள இந்த வழித்தடத்தில் விரைவில் சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் விமான நிலையம் மற்றும் கீழம்பாக்கம் மெட்ரோ தொடர்பான பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என கூறியுள்ளனர்.