Categories
தேசிய செய்திகள்

2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செஸ் வரி விதிப்பு ஜூன் 30-ம் தேதியுடன் முடிய விருந்த நிலையில், ஜிஎஸ்டி விதிகள் 2022 இன் படி, இழப்பீட்டு செஸ் வரி 2022 ஜூலை 1ம் தேதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருவாய் வசூல் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இழப்பீட்டு செஸ் வரியை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |