தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரசால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.. சென்னையில் ஒரேநாளில் அதிக பாதிப்பு இதுவே முதல்முறையாகும்..
இதனால் ஓட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757ல் இருந்து 3,023 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 29ல் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று தமிழகத்தில் 38 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341ல் இருந்து 1379 ஆக உயர்ந்துள்ளது.