உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல், தற்போது எலக்ட்ரிக் கார் சார்ஜெங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பத்தாயிரம் சார்ஜிங் போர்டுகளை நிர்மாணிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 83,888 பெட்ரோல் நிலையங்களில் 327 பெட்ரோல் நிலையங்கள் ஷெல் நிறுவனத்துக்குச் சொந்தமாகும்.
ஷாப்பிங் மால்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கார் சார்ஜர்கள் அமைக்க உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் 5 லட்சம் சார்ஜிங் போர்டுகளை அமைக்க இலக்கு கொண்டுள்ளது.இதனால் எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகளும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.