இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வணிகத்தின் அளவை வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வணிகத்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வணிகத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சரான ஆனி மேரி கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான வணிகத்தின் அளவை வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் வணிகம் தொடர்பான இடைக்கால மற்றும் இறுதி உடன்பாட்டை ஓராண்டிற்குள் முடித்து கொள்வதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய நாட்டின் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.